தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்- 30 தென்னை மரங்கள் நாசம்


தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்- 30 தென்னை மரங்கள் நாசம்
x

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள், 30 தென்னை மரங்களை நாசப்படுத்தின.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள், 30 தென்னை மரங்களை நாசப்படுத்தின.

தென்னை மரங்கள்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இங்குள்ள வனவிலங்குகள் குறிப்பாக யானைகள் உணவு, தண்ணீர் தேடி அடிக்கடி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து அங்கு சாகுபடி செய்யப்பட்டிருக்கும் பயிர்களை தின்றும், மிதித்தும் நாசம் செய்து வருகின்றன. இதனால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உள்பட்ட தாளவாடி அருகே உள்ள கரளவாடி கிராமத்தை சேர்ந்தவர் மாதேவா (வயது40). விவசாயி. இவரது தோட்டம் ஊரையொட்டி உள்ளது. இங்கு அவர் 3 ஏக்கர் பரப்பளவில் தென்னை மரங்கள் சாகுபடி செய்துள்ளார்.

நாசம் செய்த யானைகள்

இந்த நிலையில் மாதேவா நேற்று காலை தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது தோட்டத்தில் தென்னை மரங்கள் சேதப்படுத்தப்பட்டு் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து 3 யானைகள் வெளியேறின. பின்னர் அவை அருகே உள்ள மாதேவாவின் தோட்டத்துக்குள் புகுந்து தென்னங்குருத்துக்களை தின்றும், மரங்களை மிதித்தும் நாசப்படுத்திவிட்டு சென்றது தெரியவந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதமாகியுள்ளன. மேலும் இதுபற்றி ஜீர்கள்ளி வனத்துறையினருக்கும் மாதேவா தகவல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கூறும்போது, 'யானைகள் விவசாய தோட்டத்தில் புகாதவாறும், சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டு்ம்' என்றார்.


Next Story