இறந்த யானைகளுக்கு 21-ம் நாள் காரியம் செய்த கிராம மக்கள்

தர்மபுரி
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே காளிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு விவசாய நிலத்துக்கு உணவு மற்றும் தண்ணீர் தேடி சென்ற ஒரு பெண் யானை மற்றும் 2 ஆண் யானை என 3 காட்டு யானைகள் மின்சாரம் தாக்கி இறந்தன. இந்த சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று யானைகள் இறந்து 21-வது நாளையொட்டி காளிகவுண்டன் கொட்டாயில் கிராம மக்கள் ஒன்றிணைந்து 21-வது நாள் காரியத்தை நடத்தினர். அதன்படி யானைகள் புதைக்கப்பட்ட குழியின் மீது பூக்களால் அலங்கரித்தனர். பின்னர் யானைக்கு விருப்ப உணவுகளான வாழைப்பழம், கரும்பு, தேங்காய், திராட்சை பழம், ஆரஞ்சு பழம், மாம்பழம், அன்னாசி பழம், பலாப்பழம் உள்ளிட்டவைகளை வைத்து படையலிட்டனர்.
Related Tags :
Next Story