யானை தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி
யானை தாக்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண உதவி
ஈரோடு
அந்தியூர்
அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதி எப்பத்தான்பாளையத்தை சேர்ந்த அரபுலி (வயது 70) என்பவர் நேற்று முன்தினம் வனப்பகுதியில் மாடுமேய்க்க சென்றார். அப்போது அங்கு வந்த காட்டு யானை தாக்கி மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார்.
இதையடுத்து தமிழக வனத்துறை சார்பில் நிவாரண முன் பணமாக அரபுலியின் மகன் மணியிடம் ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையை தட்டக்கரை வனவர் சுப்பிரமணியம் வழங்கினார். முழுமையான நிவாரண தொகை பின்னர் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story