சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 3 நாட்களாக நடந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு


சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 3 நாட்களாக நடந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவு
x

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 3 நாட்களாக நடந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்தது.

ஈரோடு

அந்தியூர்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 3 நாட்களாக நடந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்தது.

கால்தடத்தை வைத்து...

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி, டி.என்.பாளையம், கடம்பூர், தாளவாடி, தலமலை, ஆசனூர், கேர்மாளம், ஜீர்கள்ளி ஆகிய 10 வனச்சரகங்களிலும், அந்தியூர் வனச்சரகத்திலும் ஆண்டுதோறும் மே மாதம் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான கணக்கெடுக்கும் பணி கடந்த 17-ந் தேதி தொடங்கியது.

இதற்காக வனத்துறையினர் பல்வேறு குழுக்களாக பிரிந்து காட்டு்க்குள் சென்று கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் நாளன்று யானைகளின் கால்தடம், கழிவுகளை வைத்து கணக்கிடும் பணி நடந்தது.

இறுதிநாள்

2-வது நாளான நேற்று முன்தினம் நேர்கோடு வரைந்து அதில் நடந்து செல்லும் யானைகள், அதன் கழிவுகளை வைத்து கணக்கெடுப்பு நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து நேற்று இறுதி நாள் கணக்கெடுப்பு நடந்தது. இதற்காக அந்தியூர் வனச்சரக அலுவலர் உத்திரசாமி தலைமையில் வனவர்கள் சக்திவேல், திருமூர்த்தி, விஸ்வநாதன் மற்றும் வனக்காப்பாளர்கள், வனகாவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் அந்தியூர் வரட்டுப்பள்ளம் அணை உட்பட அந்தியூர் பகுதியில் உள்ள நீர் நிலைகளுக்கு நேற்று காலை 6 மணி அளவில் சென்றனர்.

நீர்நிலைகளில் கணக்கெடுப்பு

பின்னர் அங்கு மாலை 6 மணி வரை அங்கு காத்திருந்து நீர்நிலைகளுக்கு தண்ணீர் குடிக்க வரும் யானைகளை கணக்கிட்டு திரும்பினர். இதன் மூலம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் கடந்த 3 நாட்களாக நடந்து வந்த யானைகள் கணக்கெடுக்கும் பணி நிறைவடைந்துள்ளது.

இதுபற்றி கணக்கெடுப்பு குழுவினர் வனத்துறை உயர் அதிகாரிகளிடம் தகவல் கொடுப்பார்கள். அதன் அடிப்படையில் எந்த வனப்பகுதியில் அதிக யானைகள் உள்ளன என்பது தெரியவரும்.


Next Story