யானைகள் கணக்கெடுப்பு பணி இன்றுடன் முடிவடைகிறது


யானைகள் கணக்கெடுப்பு பணி இன்றுடன் முடிவடைகிறது
x

யானைகள் கணக்கெடுப்பு பணி இன்றுடன் முடிவடைகிறது

திருப்பூர்

தளி

ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்திய அளவில் நடைபெற்று வருகிறது. அதன்படி யானைகள் கணக்கெடுப்பு பணி கடந்த 17ம் தேதி தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற்ற பணி இன்றுடன் முடிவடைய உள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுகளிலும் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது. முதல் நாளில் பிளாக் கவுண்ட் முறையில் சுற்றுகளில் 15 கிலோமீட்டர் நடந்து சென்று நேரடியாக தென்படும் யானைகள் கணக்கீடு செய்யப்பட்டது. 2 ம் நாளில் 2 கிலோமீட்டர் நேர்கோட்டுப் பாதையில் நடந்து யானைகளின் சாணம் மூலமாக மறைமுக கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.கொட்டையாறு சுற்றில் நடைபெற்ற பணியை உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குனர் க.கணேஷ்ராம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வனத்துறையினர் உடன் இருந்தனர்.

கடைசி நாளான இன்று நீர்நிலைகளுக்கு அருகில் இருந்து நேரடி முறையில் யானைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கீடு செய்யப்பட உள்ளது. கணக்கெடுப்பு பணியில் உடுமலை, அமராவதி, கொழுமம் வந்தரவு வனச்சரக அலுவலர்கள் உயிரியலாளர் மகேஷ்குமார், வனவர்கள், வனக்காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

-


Related Tags :
Next Story