பயிர்களை சேதப்படுத்திய யானைகள்


பயிர்களை சேதப்படுத்திய யானைகள்
x

தேன்கனிக்கோட்டை அருகே பயிர்களை யானைகள் சேதப்படுத்தின.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் வனப்பகுதில் இருந்து நேற்று முன்தினம் 7 யானைகள் வெளியேறின. இந்த யானைகள் லக்கசந்திரம் கிராமத்திற்குள் புகுந்தன. இந்த யானைகள் நாகராஜ் என்பவரது விவசாய நிலத்தில் புகுந்து தக்காளி, பீன்ஸ் உள்ளிட்ட பயிர்களை மிதித்தும், தின்றும் சேதப்படுத்தின. மேலும் தென்னை செடிகளை சேதப்படுத்தி விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டன. நேற்று காலை நாகராஜ் தோட்டத்திற்கு சென்ற போது யானைகள் பயிர்களை சேதப்படுத்தி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தேன்கனிக்கோட்டை வனத்துறைக்கு அவர் தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் வந்து சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர்.


Next Story