வாழை மரங்களை சேதப்படுத்திய யானைகள்


வாழை மரங்களை சேதப்படுத்திய யானைகள்
x
தினத்தந்தி 10 Oct 2022 12:15 AM IST (Updated: 10 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள் வாழை மரங்களை நாசம் செய்தன. இவற்றை மாரண்டஅள்ளி வனப்பகுதிக்கு விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே முகாமிட்டுள்ள 3 காட்டு யானைகள் வாழை மரங்களை நாசம் செய்தன. இவற்றை மாரண்டஅள்ளி வனப்பகுதிக்கு விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

3 யானைகள்

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி வனப்பகுதியில் 3 யானைகள் முகாமிட்டு இருந்தன. இந்த யானைகள் அங்கிருந்து வெளியேறி துடுகனஅள்ளி வழியாக நேற்று கிருஷ்ணகிரி அருகில் உள்ள சின்ன சோக்காடிக்கு வந்தன. இந்த யானைகள் அப்பகுதியில் இருந்த வாழை மரங்களை ஓடித்தும், தின்றும் சேதப்படுத்தின.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து 3 யானைகளையும் மாரண்டஅள்ளியில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிட மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி உத்தரவிட்டார். அதன்பேரில் தர்மபுரி வனப்பாதுகாவலர் பெரியசாமியின் தலைமையில், வனச்சரக அலுவலர் பார்த்தசாரதி, வனக்காப்பாளர் குட்டுகான், வனவர் சரவணன் மற்றும் யானை தடுப்பு காவலர்கள் விரைந்து சென்றனர்.

விவசாயிகள் கவலை

இந்த யானைகளை ஆலப்பட்டி வனப்பகுதி வரை வனத்துறையினர் விரட்டினர். தொடர்ந்து வெலகலஅள்ளி, மாரவாடி வழியாக மாரண்டஅள்ளி வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். கிருஷ்ணகிரி அருகே முகாமிட்டு வாழை மரங்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story