ராகி பயிர்களை சேதப்படுத்திய யானைகள்


ராகி பயிர்களை சேதப்படுத்திய யானைகள்
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே ராகி பயிர்களை யானைகள் சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே ராகி பயிர்களை யானைகள் சேதப்படுத்தின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

யானைகள் அட்டகாசம்

தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றித்திரிகின்றன. யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும், மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அஞ்செட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 10 யானைகள் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள சமந்தக்கோட்டை கிராமத்திற்குள் புகுந்தன. இந்த யானைகள் அப்பகுதியில் சாகுபடி செய்து வைத்திருந்த ராகி பயிர்களை தின்று சேதப்படுத்தி விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விட்டன.

விவசாயிகள் கவலை

இதனிடையே நேற்று காலை விவசாயிகள் தோட்டத்திற்கு சென்றபோது ராகி பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் விரைந்து சென்று சேதமடைந்த ராகி பயிர்களை பார்வையிட்டனர்.

அப்போது சேதமடைந்த பயிர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். யானைகள் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். ராகி பயிர்களை யானைகள் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story