10 யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும்
தேன்கனிக்கோட்டை அருகே சூரப்பன்குட்டையில் முகாமிட்டுள்ள 10 யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டை அருகே சூரப்பன்குட்டையில் முகாமிட்டுள்ள 10 யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யானைகள் அட்டகாசம்
தேன்கனிக்கோட்டை வனச்சகரம் பேவனத்தம் வனப்பகுதி வட்டவடிவு பாறை, சூரப்பன்குட்டை என்ற பகுதிகளில் 10 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் விவசாய நிலங்களில் புகுந்து தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வருகின்றன.
மேலும் நிலத்தில் உள்ள சொட்டுநீர் பாசன பைப்புகளை யானைகள் உடைத்து சேதப்படுத்தி விட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றன. கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள் பேவநத்தம், பாளேகுளி, லட்சுமிபுரம், பச்சபனட்டி, கிரிசெட்டிபள்ளி, திம்மசந்திரம், மேகலகவுண்டனூர் பகுதிகளில் சுற்றித்திரிந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றனர்.
விரட்ட வேண்டும்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளை வனப்பகுதிக்கு விரட்டினர். யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.