பவானிசாகர் அருகே யானைகள் அட்டகாசம் 300 வாழைகள் நாசம்


பவானிசாகர் அருகே யானைகள் அட்டகாசம்  300 வாழைகள் நாசம்
x

யானைகள் அட்டகாசம்

ஈரோடு

பவானிசாகர் அருகே உள்ள விளாமுண்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள சித்தன்குட்டை காடுவாய்கிணறு பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 43). விவசாயி. இந்தநிலையயில் வனப்பகுதியை விட்டு ெவளியேறிய யானைகள் கனகராஜின் தோட்டத்தில் புகுந்து வாழைகளை மிதித்தும், தின்றும் நாசப்படுத்தின. விவசாயிகள் ஒன்று சேர்ந்து தீப்பந்தம் காட்டி விரட்டியும் யானைகள் செல்லவில்லை. சுமார் 300-க்கும் மேற்பட்ட வாழைகளை நாசம் செய்த பின்னரே காட்டுக்குள் சென்றன. சேதமடைந்த வாழைகளுக்கு வனத்துறையினர் நஷ்ட இடு வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.


Next Story