டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்
டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்
பட்டியல் இன முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவருக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி 2022-2023-ம் ஆண்டிற்கான விருது ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்பட உள்ளது. எனவே, பட்டியலின முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு புரிந்து தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள், சான்றோர்களில் தகுதியான நபர்கள் இருப்பின் விண்ணப்பங்களை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பெரம்பலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு பூர்த்தி செய்து, அதே அலுவலகத்திற்கு வருகிற 12-ந்தேதிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story