பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு


பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு
x

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தர்மபுரி

தர்மபுரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி உறுதிமொழியை வாசித்தார். இதைத்தொடர்ந்து அனைத்து துறை அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் பின்தொடர்ந்து வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் குணசேகரன், மாவட்ட சமூக நல அலுவலர் ஜான்சிராணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மரியம் ரெஜினா, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அமுதவள்ளி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சவுண்டம்மாள், குடும்ப நல துணை இயக்குனர் மலர்விழி, காசநோய் துணை இயக்குனர் ராஜ்குமார், தொழுநோய் துணை இயக்குனர் புவனேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story