திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தேர்தல்


திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தேர்தல்
x
திருப்பூர்


திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் 1,168 ஏற்றுமதியாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். சங்கத்தில் தலைவர், 2 துணை தலைவர்கள், பொதுச்செயலாளர், 2 இணை செயலாளர்கள், பொருளாளர் என 7 நிர்வாக பதவி, 20 செயற்குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கடந்த 2019-ம் ஆண்டு தேர்தல் முடிந்து நிர்வாகத்தின் பதவிக்காலம் முடியவடைய உள்ளது. புதிய நிர்வாகம் அமைவதற்காக சங்க தேர்தல் நடத்த வேண்டியுள்ளது. இதுகுறித்து முடிவு செய்ய ஏற்றுதியாளர் சங்க செயற்குழு கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் ராஜா சண்முகம் தலைமை தாங்கினார். இவர் கடந்த 2016, 2019 ஆண்டுகளில் தலைவராக தேர்வாகி செயல்பட்டு வருகிறார். இந்த கூட்டத்தில் 2022-25-ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வருகிற 30-ந் தேதி சங்க தேர்தல் நடத்துவது, அன்று மாலை பொதுக்குழு கூட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஓட்டுப்பதிவு மற்றும் பொதுக்குழு கூட்டம் முதலிபாளையத்தில் உள்ள நிப்ட்-டீ கல்லூரியில் நடைபெறஉள்ளது. தேர்தல் நடைமுறை தொடர்பான தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.


Next Story