இமானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா
நெல்லையில் இமானுவேல் சேகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நெல்லை பாளையங்கோட்டை மகாராஜநகரில் இமானுவேல் சேகரன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அலங்கரித்து வைக்கப்பட்ட அவரது உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமை தாங்கினார். மாவட்ட மாணவரணி செயலாளர் முத்துப்பாண்டி, நகர செயலாளர் மோகன், மானூர் ஒன்றிய செயலாளர் ஆதிபாண்டியன், பகுதி இளைஞரணி செயலாளர் முத்து, பகுதி பொருளாளர் முருகேஷ் பாண்டியன், மாவட்ட தொண்டர் அணி தலைவர் மகாராஜா பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story