காவிரி,வைகை,குண்டாறு இணைப்பு திட்டத்தை சிவகங்கை வரை நீட்டிக்க வேண்டும் -இந்திய தேசிய லீக் வலியுறுத்தல்
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை சிவகங்கை வரை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
சிவகங்கை
காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை சிவகங்கை வரை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய தேசிய லீக் கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.
பொதுக்குழு கூட்டம்
இந்திய தேசிய லீக் கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஜாபர் அலி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஷேக் முகமது வரவேற்று பேசினார்
தென்மண்டல அமைப்புச் செயலாளர் அம்ஜத்கான், மாநில தலைவர் பஷீர் முகமது, பொதுச்செயலாளர் அப்துல் காதர், மாநில பொருளாளர் குத்தூஸ் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டு பேசினா்.பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்கள்
சிவகங்கை மக்களின் நீண்ட கால கனவான கிராபைட் தொழிற்சாலையை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசனூர் சிப்காட் தொழிற்பேட்டை தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சிவகங்கை நகரின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவும் காவிரி, வைகை, குண்டாறு இணைப்பு திட்டத்தை சிவகங்கை வரை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் நகரச் செயலாளர் முகமது முஸ்தபா நன்றி கூறினார்.
பின்னா் அக்கட்சியின் மாநில தலைவர் பசீர் அகமது நிருபர்களிடம் கூறியதாவது:
தி.மு.க. கூட்டணிக்கே ஆதரவு
மத்திய அரசு சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பெருக்க முன் வரவேண்டும் நதிநீர் திட்டங்களை உருவாக்கி ஆற்றுநீா் கடலில் கலந்து வீணாவதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாமல் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களும் என மொத்தமாக 700 பேர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர். அவர்களை ஆதிநாராயனன் குழு பரிந்துரைத்ததின் பேரில் விடுதலை செய்ய அரசு முன் வரவேண்டும் மேலும் நடக்கவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கே எங்கள் ஆதரவு. அவர்கள் வெற்றி பெறவே எங்கள் கட்சியினர் வேலை செய்யவுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.