கோரிக்கைகளை வலியுறுத்திஅங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.
தேனி
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில், தேனி பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் வனிதா தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் நாகலட்சுமி மற்றும் பலர் கலந்துகொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, குழந்தைகளின் வருகையை கணக்கில் கொண்டு பிரதான குறு மையங்களாக மாற்றுவதையும், குறு மையங்களை பிரதான மையங்களுடன் இணைப்பதையும் கைவிட வேண்டும். ஊட்டச்சத்து மேம்படுத்துதல் என்ற பெயரில் மையங்களை இணைப்பதை கைவிட வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு மே மாதம் விடுமுறை அளிக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவதுபோல் மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story