மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க வலியுறுத்தல்


மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க வலியுறுத்தல்
x

மாற்றுத்திறனாளி உதவித்தொகை வழங்க வலியுறுத்தி மூதாட்டி மனு அளித்தார்.

அரியலூர்

உடையார்பாளையம் தாலுகா நடுவெளி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ஜெயலட்சுமி(வயது 70), உதவித்தொகையை மீண்டும் வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு அளித்தார். மேலும் அவர் கூறுகையில், எனக்கு வழங்கப்பட்டு வந்த மாற்றுத்திறனாளி உதவித்தொகை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டு விட்டது. அதனை மீண்டும் வழங்கக்கோரி 3 முறை மனு அளித்துள்ளேன். ஆனால் உதவித்தொகையை மீண்டும் வழங்கவில்லை. ஒவ்வொரு முறை மனு அளிக்க வரும்போதும் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. எனது கணவர் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். இதனால் உதவித்ெதாகையை கொண்டே வாழ்க்கை நடத்தி வந்தேன். எனவே எனக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகையை மாவட்ட கலெக்டர் மீண்டும் பெற்றுத்தர வேண்டும் என்று மனு அளித்துள்ளதாக கண்ணீர் மல்க கூறினார்.


Next Story