கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி
சாத்தூர் அருகே உள்ள வன்னி விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.
சாத்தூர்,
சாத்தூர் அருகே உள்ள வன்னி விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது.
கோவில் உண்டியல்
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட சின்னஓடைப்பட்டியில் வன்னி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கமான பூஜைகள் செய்ய கோவில் அர்ச்சகர் வெங்கடேஷ் சென்றார். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவரும், கோவில் காவலர் மாரியப்பன் இதுகுறித்து கோவில் தக்கார் சுபாஷினிக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த தக்கார், கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதிகாலை 3 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கோவிலில் உள்ள உண்டியலை இரும்பு கம்பியால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது.
3 பேருக்கு வலைவீச்சு
உண்டியலை திறக்க முடியாததால் உண்டியலில் இருந்த பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் தப்பியது. இதனையடுத்து தக்கார் சாத்தூர் தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம் தெரியாத 3 பேரை தேடி வருகின்றனர்.