வேலைவாய்ப்பு குறித்த சிறப்பு திறன் பயிற்சி
வேலூரில் வேலைவாய்ப்பு குறித்த சிறப்பு திறன் பயிற்சி நடைபெற்றது.
வேலூர்
தமிழக காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத்துறை ஆகிய துறை சார்ந்தவர்களின் வாரிசுதாரர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் வருகிற 18, 19-ந் தேதிகளில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அவர்களுக்கான சிறப்பு திறன் பயிற்சி வகுப்பு நேற்று வேலூர் டி.கே.எம். கல்லூரியில் நடைபெற்றது.
சிறைத்துறை டி.ஐ.ஜி. செந்தாமரைக்கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன், சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் சுமார் 60 பேர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு, வேலை வாய்ப்பு முகாமில் எவ்வாறு பங்கு பெற வேண்டும். அதற்காக சிறப்பு பயிற்சிகளை பயிற்சியாளர்கள் வழங்கினர்.
இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story