மின்கம்பத்தில் இருந்து விழுந்து ஊழியர் பலி


மின்கம்பத்தில் இருந்து விழுந்து ஊழியர் பலி
x

மின்கம்பத்தில் இருந்து விழுந்து ஊழியர் பலியானார்.

திருப்பத்தூர்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த கண்ணையன் மகன் கார்த்திக் (வயது 27). இவர் ஆம்பூர் கிழக்கு மின்சார வாரியம் அலுவலகத்தில் கடந்த 20 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தார். இந்தநிலையில் ஆம்பூர் பர்ணக்கார தெருவில் உள்ள மின்கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கம்பத்தில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் டவுன் போலீசார் கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story