நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியா்கள் ஆர்ப்பாட்டம்


நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியா்கள் ஆர்ப்பாட்டம்
x

நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியா்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

7-9-2002 முதல் 12-2-2006 வரை உள்ள 41 மாத பணி நீக்க காலத்தில் இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கிட வேண்டும், சாலைகளின் அகலம் மற்றும் நீளத்திற்கு ஏற்ப வாகன நெரிசல் கனரக வாகன போக்குவரத்து அடிப்படையில் சாலைகளை பராமரிக்க 5 கிலோ மீட்டருக்கு சாலை பணியாளர்கள் 2 பேர் பணியிட ஒப்புதல் வழங்க வேண்டும், தமிழக நெடுஞ்சாலைத்துறையில் உள்ள அனைத்து சாலைகளை தனியாருக்கு பராமரிப்பு வழங்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

மாவட்ட தலைவர் கோபகுமார் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அருணாச்சலம் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட துணை தலைவர்கள் கிறிஸ்டின் ராஜ், காந்தி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் இருதய ராஜா மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


Next Story