வேலைவாய்ப்பு முகாம்
திருவாரூரில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் ஆகியவை சார்பில் திருவாரூர் மாவட்ட இளைஞர்களுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடந்தது.இந்த முகாமில் திருவாரூர் உட்பட பிற மாவட்டங்களில் இருந்து 27 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இந்த முகாமில் 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், டிப்ளமோ, ஐ.டி.ஐ., பட்டதாரிகள் 288 பேர் கலந்து கொண்டனர். இதில் 88 இளைஞர்களுக்கும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி நியமன ஆணையை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் பழனிவேல் (பொறுப்பு), துணை வேலை வாய்ப்பு அலுவலர் சோமஅழகன் ஆகியோர் வழங்கினர்.
Related Tags :
Next Story