வேலைவாய்ப்பு முகாமில் 127 பேருக்கு பணி நியமன சான்று


வேலைவாய்ப்பு முகாமில் 127 பேருக்கு பணி நியமன சான்று
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 127 பேர் பணி நியமன சான்று பெற்றனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கோவில்பட்டி யூனியன் அலுவலக வளாகத்தில் இளைஞர் திறன் பயிற்சி ஊக்கத்தொகையுடன் கூடிய வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 11 நிறுவனங்கள் சார்பில் நேர்காணல் நடந்தது. இதில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள 637 பேர் கலந்து கொண்டார்கள். பயிற்சி மற்றும் ஊக்கத்தொகையுடன் அளிக்கப்படும் திறன் வளர்ப்பு பயிற்சிக்கு 127 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள்.

இந்த தேர்வு ஏற்பாடுகளை ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், உதவி திட்ட அலுவலர் பிரேமா, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயலட்சுமி, பழனியம்மாள், வட்டார மேலாளர் சங்கர் ஆகியோர் செய்திருந்தனர். தேர்வு பெற்றவர்களுக்கு பணி நியமன சான்றிதழ்களை கோவில்பட்டி யூனியன் தலைவர் வழங்கினார். யூனியன் ஆணையாளர் சீனிவாசன் வரவேற்று பேசினார். கூட்டமைப்பு தலைவி தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.


Related Tags :
Next Story