ஓட்டப்பிடாரத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
ஓட்டப்பிடாரத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி நடந்தது. இதில் சண்முகையா எம்.எல்.ஏ.கலந்து கொண்டார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டத்தின் சார்பில் இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி திருவிழா டி.எம்.பி.மெக்கவாய் கிராமிய ஆரம்ப பள்ளியில் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் வீரபுத்திரன் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி வைத்து இளைஞர் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். வேலை வாய்ப்பு பயிற்சி நேர்காணலில் தேர்ச்சி பெற்ற இளைஞர்களுக்கு பணி நியமன ஆணையை எம்.எல்.ஏ வழங்கிகினார்.
நிகழ்ச்சியில் திறன் வளர்ப்பு உதவி இயக்குனர் ஏஞ்சல் விஜயா நிர்மலா, மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் அருண் பிரசாத், பிரியங்கா, யூனியன் கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன் உட்பட மகளிர் திட்ட பணியாளர்கள், அரசு அலுவலர்கள், மற்றும் மாணவ மாணவிகள், இளைஞர்கள் பெண்கள் கலந்து கொண்டனர்.