'என் மண், என் தேசம்' விழிப்புணர்வு ஊர்வலம்
வாணியம்பாடி நகராட்சி சார்பில் ‘என் மண், என் தேசம்’ விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
வாணியம்பாடி நகராட்சி சார்பில் சுதந்திர தின அமுதபெருவிழாவை முன்னிட்டு என் மண், என் தேசம் என்ற விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
நகரமன்ற அலுவலகம் அருகே ஊர்வலத்தை நகரமன்ற தலைவர் உமாசிவாஜிகணேசன், நகராட்சி ஆணையாளர் சதீஷ்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் சுகாதார பிரிவு அலுவலர்கள், நகராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்துக் கொண்டு நகரின் முக்கிய சாலைகள் வழியாக சென்று பிளாஸ்டிக் ஒழிப்பு, குப்பைகளை பிரித்து தருதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதேபோல், உதயேந்திரம் பேரூராட்சியில் சுதந்திர தின அமுதபெருவிழா மற்றும் என் மண், என் தேசம் குறித்து மரக்கன்று நடுதல், ஓட்டு மொத்த தூய்மை பணி, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் ஆ.பூசாராணி, செயல் அலுவலர் ரேவதி, மன்ற உறுப்பினர் ஆ.செல்வராஜ் மற்றும் அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.