சாரங்கபாணி கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்


சாரங்கபாணி கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றம்
x

கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு தேரோடும் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தஞ்சாவூர்

கும்பகோணம்;

கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு தேரோடும் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தேரோட்டம்

கும்பகோணம் சாரங்கபாணி சாமி கோவிலில் இன்று (புதன்கிழமை) சித்திரை தேரோட்டம் நடைபெற உள்ளது. இதையொட்டி தேரோட்டத்தை சிறப்பான முறையில் நடத்துவதற்காக அரசு பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. தேரோட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தல் தேரோடும் 4 வீதிகளிலும் சாலைகளை சமப்படுத்தி தேர் சக்கரம் இயங்குவதற்கு ஏதுவாக சாலை மேம்படுத்தும் பணி தேரோடும் வீதிகளில் குறுக்கே செல்லும் மின் கம்பிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் ஆகியவற்றை அகற்றும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில், தேரோடும் 4 வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமையில், மாநகராட்சி ஆணையர் லெட்சுமணன், தாசில்தார் வெங்கடேஸ்வரன், நகரமைப்பு அலுவலர் ராமலிங்கம், நகரமைப்பு ஆய்வாளர்கள் சரவணன், தமிழ்வாணன் உள்ளிட்ட அதிகாரிகள் தேரோடும் 4 வீதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது அந்த பகுதியில் கடைகளுக்கு முன்புறம் போடப்பட்டிருந்த தகர சீட்டுகள், சாலையை மறித்து போடப்பட்ட கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உத்தரவிட்டதை தொடர்ந்து மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர்.


Next Story