எமனேரி வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு கண்டறியும் பணி


எமனேரி வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு கண்டறியும் பணி
x

எமனேரி வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு கண்டறியும் பணி நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், தா.பழூர் எமனேரி வரத்து வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் கண்டறியும் பணி நடைபெற்றது. 28 ஏக்கர் பரப்பளவு உள்ள எமனேரி நீண்ட காலமாக தூர்வாரப்படாமல் இருந்த நிலையில் கடந்த கொரோனா காலத்தில் நன்கு ஆழப்படுத்தப்பட்டது. ஆனால் அதன் வரத்து வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் ஏரி தூர்வாரப்பட்டும் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டு வருகிறது. இதனை அடுத்து அதன் வரத்து வாய்க்கால்களை கண்டறிந்து அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முடிவு எடுத்தனர். ஏரிக்கு தண்ணீர் வரும் பகுதிகளை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தன் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளை கண்டறிந்து குறிக்கப்பட்டுள்ளது. மேலும் விரைவில் குறியிடப்பட்ட ஆக்கிரமிப்பு பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி வரத்து வாய்க்கால் தூர்வாரப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story