இலந்தைகூடம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு ஏரி மீட்பு


இலந்தைகூடம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு ஏரி மீட்பு
x

இலந்தைகூடம் கிராமத்தில் ஆக்கிரமிப்பு ஏரி மீட்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட இலந்தைகூடம் கிராமத்தில் இருந்த வீரப்புடையார் ஏரி கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது. இதன் மொத்த பரப்பளவு 12 ஏக்கர் ஆகும். இதில் 11 ஏக்கரை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயராஜ் முன்னிலையில் ஏரியின் ஆக்கிரமிப்புகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டு கரையமைக்கும் பணி நேற்று தொடங்கியது.


Next Story