கோவில் இடங்களில் ஆக்கிரமிப்பு?


கோவில் இடங்களில் ஆக்கிரமிப்பு?
x

கோவில் இடங்களில் ஆக்கிரமிப்பு உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை

அருப்புக்கோட்டையில் இந்து சமய அறநிலைத்துறைக்கு பாத்தியப்பட்ட தாதன்குளம் விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக பூக்கடை பஜார் மற்றும் திருச்சுழி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 17 கடைகள் உள்ளன. இக்கடைகளில் வாடகைக்கு இருப்பவர்கள் பல ஆண்டுகளாக வாடகை தராமல் அந்த இடத்தில் அடுக்கு மாடிகள் கட்டி வேறு சிலருக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். மேலும் கோவிலுக்கு சொந்தமான இடத்தை பட்டா மாற்றம் செய்ய முயற்சித்துள்ளனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறைக்கு புகார்கள் வந்தன.

இந்தநிலையில் விருதுநகர் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் வளர்மதி தலைமையில் கோவில் நிலங்கள் தாசில்தார் கண்ணன், கோவில் செயல் அலுவலர் தேவி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தாதன்குளம் விநாயகர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டனர். மேலும் ஆக்கிரமிப்பு செய்த இடங்கள், அவற்றை பட்டா மாறுதல் செய்துள்ளார்களா என்பதை அறிக்கையாக சேகரித்துள்ளனர்.



Next Story