ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி
திருவாரூர்
மன்னார்குடியில் புதிய ஒருங்கிணைந்த நவீன நிலையம் ரூ. 27 கோடியில் கட்டும் பணி தொடங்கியுள்ளது. புதிய பஸ் நிலைய கட்டுமான பணிக்காக பழைய பஸ் நிலையத்தில் உள்ள கட்டிடங்கள் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மன்னார்குடி தேரடி பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்காலிக பஸ் நிலையத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் விபத்துகள் ஏற்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தற்காலிக பஸ் நிலையம் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. மன்னார்குடி நகராட்சி சார்பில் பொக்லின் எந்திரம் மூலம் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கடைகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story