அமரகண்டான் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
அமரகண்டான் குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று துண்டு பிரசுரம் வினியோகம் செய்யப்பட்டது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பக்ருதீன் தலைமையில், கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் பொன்னமராவதி பஸ் நிலையம், அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினர். அதில், பொன்னமராவதி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்திட வேண்டும். அமரகண்டான் குளத்தின் 4 கரைகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி அதன் ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்திட வேண்டும். பாரம்பரியமிக்க அமரகண்டானின் பரப்பை சுருக்கக் கூடாது. பகுதி நேர இருசக்கர வாகன காப்பகத்தை நிரந்தர ஏற்பாட்டில் 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். அமரகண்டான்-பேரூராட்சி சந்தை சீரமைப்பு திட்டங்களின் மதிப்பீடு- மாதிரி வரைபடங்களை பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரம் செய்தனர்.