நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்


நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
x

நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,


நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஒன்றியக்குழு கூட்டம்

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுவின் சாதாரண கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சசிகலா தலைமையில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சூரியகுமாரி, காஜா மைதீன் பந்தே நவாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து கூறினர். அதன் விவரம் வருமாறு:-

கவுன்சிலர் சீனிவாசன்:- கஞ்சநாயக்கன்பட்டியில் காட்டு

பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. அதேபோல நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்

வட்டார வளர்ச்சி அலுவலர் -

பன்றிகள் தொல்லை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். பிற கோரிக்கைகள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

பழைய தீர்மானம்

கவுன்சிலர் பண்டாரசாமி:- எவ்வளவு நிதிவருகிறது என்றே தெரியவில்லை. பழைய தீர்மானங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. அரசு அதிகாரிகளுக்கு தான் என்னென்ன திட்டங்கள் உள்ளது என்பது தெரியும். மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி போதிய நிதியை பெற்றுத்தர வேண்டும்.

கோவிந்தசாமிநாதன்:- பாளையம்பட்டியில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. கொசு மருந்து அடிக்க வேண்டும். வேல்முருகன் நகர், சண்முக வேல் நகர், இந்திரா நகர் வாருகால் அமைக்க வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தலைவர் தெரிவித்தார்.


Next Story