நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்


நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
x

கும்பகோணத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணத்தில் நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

குறைதீர்க்கும் கூட்டம்

கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கினார்.கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

ஆறுகளில் மணல் திருட்டைத் தடுக்க வேண்டும், சுவாமிமலை மற்றும் திருவலஞ்சுழியில் உள்ள முருகன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள், இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கும்பகோணம் கோட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

தூர்வார வேண்டும்

பாபநாசம் அருகே உள்ள, வாழ்க்கை-தூத்தூர் இடையே உயர்மட்ட பாலத்துடன் கூடிய கதவணையைக் கட்டும் திட்டத்தை தொடங்க வேண்டும், கபிஸ்தலம் பகுதியிலுள்ள அனைத்து வாய்க்கால்களையும் தூர் வாரவேண்டும். திருப்பனந்தாள் அருகே உள்ள கூத்தனூர் கோடீஸ்வரர் கோவில் பகுதியில் குத்தகைதாரர், வேலி அமைத்துள்ளதால், சாலை அமைக்க முடியவில்லை, போக்குவரத்து மற்றும் பள்ளி மாணவ,மாணவிகள் சென்று வருவதற்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. இவ்வாறு விவசாயிகள் பேசினர். இதற்கு பதில் அளித்து பேசிய கோட்டாட்சியர் பூர்ணிமா கூறுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து உரிய தீர்வு காணப்படும் என்றார்.


Next Story