ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்


ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
x

அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டு்ம் என நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நகரசபை கூட்டம்

அருப்புக்கோட்டை நகரசபையின் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நடைபெற்றது. நகர்மன்ற துணைத்தலைவர் பழனிச்சாமி, ஆணையாளர் அசோக்குமார், பொறியாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் தெரிவித்த கோரிக்கைகள் வருமாறு:-

பாலசுப்பிரமணியன்:- விருதுநகர் செல்லும் சாலையில் உள்ள வாருகால்களில் மண்மேவி கிடப்பதால் மழைநீர் செல்ல முடியாமல் சாலையில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஆக்கிரமிப்பு

தனலட்சுமி:- 1-வது வார்டு பகுதியில் பழுதடைந்த கிடக்கும் போர்வெல் மோட்டார்களை சரி செய்ய வேண்டும்.

ஜெயகவிதா:- தெற்கு தெரு விரிவாக்க பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து வீதிகளில் தண்ணீர் ஓடுகிறது. மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு உள்ள இடத்தில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது. தெற்கு தெரு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

முருகானந்தம்:- அகமுடையார் பகுதியிலிருந்து திருச்சுழிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது.

உறுதிமொழி

அப்துல் ரகுமான்:- முஸ்லிம் நடுத்தெருவில் போர்வெல் வயர் தொங்கி காணப்படுகிறது.

நகர்மன்ற தலைவர்:- நகர் மன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு குறித்த உறுதிெமாழியை நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் எடுத்துக்கொண்டனர்.

முன்னதாக சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சாந்தி பேசியதாவது:- மழைக்காலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளது.

எனவே வீட்டின் அருகில் தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். வாரம் ஒரு முறை தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றார்.


Next Story