ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்


ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
x

ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

விருதுநகர்

திருச்சுழி,

ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம சபை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கல்லூரணி

திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள குலசேகரநல்லூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் ஊராட்சிமன்றத் தலைவர் சிவமாரியப்பன் தலைமையிலும், துணைத்தலைவர் கார்த்திக் முன்னிலையிலும் நடைபெற்றது. கல்லூரணி ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர் ராசமாணிக்கம் தலைமையிலும், துணைத்தலைவர் மகாலட்சுமி முன்னிலையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. சவ்வாசுபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜலட்சுமி சீமைச்சாமி தலைமையிலும், துணைத்தலைவர் தர்மராஜ் முன்னிலையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் ராஜபாண்டி செய்திருந்தார். கீழக்கண்டமங்கலம் ஊராட்சியில் ஊராட்சி மன்றதலைவர் கிருஷ்ணம்மாள் மருதன் தலைமையிலும், துணைத்தலைவர் சசிகலா அன்பரசன் முன்னிலையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

தமிழ்பாடி

தமிழ்பாடி ஊராட்சியில் ஊராட்சி மன்றதலைவர் இருளன் தலைமையிலும், துணைத்தலைவர், ராஜாத்தி முன்னிலையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருச்சுழி தாசில்தார் சிவக்குமார் கலந்து கொண்டார். திருச்சுழி ஊராட்சி ஒன்றியம், காளையார், கரிசல்குளம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மகாலிங்கம் தலைமையிலும், துணைத்தலைவர் பாண்டியம்மாள் ரகுராமன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காளையார் கரிசல்குளம் கிராமத்தில் உள்ள முக்கிய சாலையில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

சாத்தூர்

சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் சத்திரப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குனர் தெய்வேந்திரன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் உமா சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அலமேலு, பொறியாளர் நாராயணசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுகி ஆகியோர் செய்திருந்தனர்.

இதனை தொடர்ந்து சிறுகுளம், இருக்கன்குடி, பெரியஓடைப்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, மேட்டமலை உள்பட அனைத்து பஞ்சாயத்துக்களிலும் கிராம சபை கூட்டங்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்வாறு சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் சார்பாக ஊராட்சி ஒன்றிய 46 பஞ்சாயத்துகளிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.


Next Story