போதை சீரழிவை முற்றிலுமாக கட்டுப்படுத்த கஞ்சா வலைப்பின்னலை அடியோடு ஒழியுங்கள் - அன்புமணி ராமதாஸ்
கஞ்சா வலைப்பின்னலை கண்டறிந்து அதை அடியோடு ஒழிப்பது தான் கஞ்சா போதை சீரழிவை முற்றிலுமாக கட்டுப்படுத்த உதவும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகில், ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 2 கோடி மதிப்புள்ள 750 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறையினரின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. ஆனால், கஞ்சா ஒழிப்புக்கு இது போதுமானது அல்ல.
கஞ்சா வலைப்பின்னலை கண்டறிந்து அதை அடியோடு ஒழிப்பது தான் கஞ்சா போதை சீரழிவை முற்றிலுமாக கட்டுப்படுத்த உதவும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story