அழிந்து வரும் உயிரினங்கள் தின விழிப்புணர்வு
பந்தலூர் அருகே அழிந்து வரும் உயிரினங்கள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் அருகே கூடமூலா பழங்குடியின கிராமத்தில் தன்னார்வ அமைப்பு சார்பில், அழிந்து வரும் உயிரினங்கள் தினத்தையொட்டி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு நவ்ஷாத் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டியதன் அவசியம், அழிந்து வரும் வனவிலங்குகள், பறவைகளை பாதுகாப்பது குறித்து பேசினார். தொடர்ந்து மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மேலும் பழங்குடியினர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
Related Tags :
Next Story