அமலாக்கத்துறை சோதனை ஜாலியாக போய்க் கொண்டிருக்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி


அமலாக்கத்துறை சோதனை ஜாலியாக போய்க் கொண்டிருக்கிறது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
x
தினத்தந்தி 21 Jun 2023 3:44 PM IST (Updated: 21 Jun 2023 4:37 PM IST)
t-max-icont-min-icon

என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள், கலைஞர் வைத்த பெயர் உதயநிதி, அப்படி அழைத்தாலே போதும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை,

மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாப்களின் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

நமது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை வழங்கிக்கொண்டிருக்கிறார். தேசிய அளவில் எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியை முதல்-அமைச்சர் மேற்கொண்டுள்ளார். இதனை கண்டு பாஜக அஞ்சுகிறது.

என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள்; கலைஞர் வைத்த பெயர் உதயநிதி, அப்படி அழைத்தாலே போதும். நான் உண்மையாகவே அரசியல் அனுபவம் உள்ளிட்டவை பார்க்கும் போது சின்னவன் தான். பிரதமர் மோடி விமானி இல்லாமல் கூட செல்வார். ஆனால் அதானி இல்லாமல் செல்ல மாட்டார். பாஜகவை ஒருபோதும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள், எதிர்க்க மட்டும் தான் செய்வார்கள். பாஜக திமுகவை எதிர்க்கிறது என்றால், நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம் என தெரிவித்துள்ளார்.

மேலும், மத்தய அரசு அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட சோதனைகளை மேற்கொண்டு திமுக அரசை அச்சுறுத்த நினைக்கிறது. எதிர்கட்சிகளை ஒருங்கிணைப்பதால் தான் மத்திய அரசு திமுகவை எதிர்க்கிறது. திமுகவில் சாதாரண கிளைச்செயலாளரை கூட பாஜக அரசு ஒன்றும் செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமலாக்கத்துறை சோதனையை எப்படி பார்க்கிறீர்கள் என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, உதயநிதி ஜாலியாக போய்க் கொண்டிருப்பதாக கூறினார்.

மயிலாடுதுறையில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கழக மூத்த முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கழக செயலாளர் நிவேதா முருகன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.

இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளி 60 நபர்களுக்கு மூன்று சக்கர வாகனம் மற்றும் 300 பெண்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.



Related Tags :
Next Story