திருவட்டார் அருகே மூதாட்டியை தாக்கிய என்ஜினீயர் கைது


திருவட்டார் அருகே மூதாட்டியை தாக்கிய என்ஜினீயர் கைது
x

திருவட்டார் அருகே மூதாட்டியை தாக்கிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் அருகே மூதாட்டியை தாக்கிய என்ஜினீயர் கைது செய்யப்பட்டார்.

என்ஜினீயர் கைது

திருவட்டார் அருகே உள்ள மேக்காமண்டபம் குமரன்குடிவிளை பகுதியை சேர்ந்தவர் ராஜபாய் (வயது 66). அதே பகுதியை சேர்ந்தவர் ஞானசீலன் (55). இவருடைய மகன் ஜோய்மோன் (28), என்ஜினீயர். இவர் வேலை தேடி வருகிறார். ராஜபாய்க்கும் ஞானசீலன், அவரது மகன் ஜோய்மோன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ராஜபாய் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஞானசீலன், ஜோய்மோன் ஆகிய இருவரும் சேர்ந்து ராஜபாயை எட்டி உதைத்து கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர். இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ராஜபாய் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் சப்-இன்ஸ்பெக்டர் ஞானதாஸ் வழக்குப்பதிவு செய்து ஜோய்மோனை கைது செய்தார். ஞானசீலனை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story