100 அடி உயர வயர்லஸ் கோபுரத்தில் ஏறி என்ஜினீயர் தற்கொலை மிரட்டல்


100 அடி உயர வயர்லஸ் கோபுரத்தில் ஏறி என்ஜினீயர் தற்கொலை மிரட்டல்
x

தஞ்சை போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள 100 அடி வயர்லஸ் கோபுரத்தில் ஏறி என்ஜினீயர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்


தஞ்சை போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் உள்ள 100 அடி வயர்லஸ் கோபுரத்தில் ஏறி என்ஜினீயர் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

என்ஜினீயர்

தஞ்சை தொல்காப்பியர் சதுக்கம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மகன் ராம்குமார் (வயது31). என்ஜினீயர். இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராம்குமாரின் பாட்டி மரணம் அடைந்தார். ஆனால் ராம்குமார், தனது பாட்டியின் இறப்பில் சந்தேகம் உள்ளது என மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்து விட்டு, பிரேத பரிசோதனை அறிக்கை சான்றிதழ் கேட்டார்.ஆனால் போலீசார் நடவடிக்கை மேற்கொள்ளாமலும், உடற்கூறு சான்றிதழை வழங்காமல் இருந்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார், நேற்று காலை தஞ்சை கிழக்கு போலீஸ் நிலையம் அருகில் போலீசார் குடியிருப்பு வளாகத்தில் 100 அடி உயரமுள்ள வயர்லெஸ் கோபுரத்தில் ஏறினார்.

தற்கொலை மிரட்டல்

அவர் 50 அடி உயரம் சென்ற போது அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினார். இதுகுறித்து தகவலறிந்ததும் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.மேலும் இது குறித்து தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வராஜ் தலைமையில் சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வந்தனர். பின்னர், துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, 25 நிமிடம், ராம்குமாரிடம் செல்போன் மூலம் பேச்சு வார்த்தை நடத்தி, கோரிக்கை அனைத்து நிறைவேற்றித்தரப்படும் என உறுதியளித்தார்.

போலீசார் விசாரணை

அதன் பின்னர் ராம்குமார், வயர்லஸ்கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். பின்னர் அவரை கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story