என்ஜினீயர் மர்ம சாவு


என்ஜினீயர் மர்ம சாவு
x
தினத்தந்தி 15 Aug 2023 12:15 AM IST (Updated: 15 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் சின்னப்பாலம் பகுதியில் என்ஜினீயர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் சின்னப்பாலம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 28). என்ஜினீயர். இவரது மனைவி வாசுகி.

இந்த நிலையில் கார்த்திக் பாம்பன் சின்னப்பாலம் கடற்கரை அருகே உள்ள காட்டுகருவேலச்செடி பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்ததும் பாம்பன் போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை பார்வையிட்டனர். அவரது உடலில் தீ காயம் பட்டதற்கான தடயங்கள் இருந்துள்ளது. தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து பாம்பன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் என்ஜினீயர் கார்த்திக் கொலை செய்யப்பட்டரா என்ற சந்தேகத்தின் பேரில் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story