என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை


என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை
x

என்ஜினீயர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கரூர்

குளித்தலை உழவர் சந்தை அருகே உள்ள கலப்பு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 30). இவர் தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். என்ஜினீயரான இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். சிலம்பரசனுக்கு அவரது வீட்டில் திருமண ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிலம்பரசன் வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்துள்ளார். இதைபார்த்த அவரது தாய் செல்வி அருகில் இருந்தவர்களின் உதவியுடன் சிலம்பரசனை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மேலும் இதுகுறித்து குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசன் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story