ரூ.28 லட்சத்தில் பொறியாளர் குடியிருப்பு


ரூ.28 லட்சத்தில் பொறியாளர் குடியிருப்பு
x

செஞ்சியில் ரூ.28 லட்சத்தில் பொறியாளர் குடியிருப்பை கட்டுமான பணியை அமைச்சர் மஸ்தான் தொடங்கி வைத்தார்.

விழுப்புரம்

செஞ்சி:

செஞ்சி தாலுகா அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத் துறை சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பில் பொறியாளர் குடியிருப்பு கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜை மற்றும் கட்டுமான பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு உதவி செயற்பொறியாளர் ரமேஷ் தலைமை தாங்கினார், செஞ்சி ஒன்றியக்குழு தலைவர் விஜயகுமார், பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து கட்டுமான பணியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றியக்குழு துணை தலைவர் ஜெயபாலன், ஒன்றிய கவுன்சிலர் பச்சையப்பன், உதவி பொறியாளர் தினேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story