என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை


என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தற்கொலை
x
தினத்தந்தி 1 Aug 2023 1:00 AM IST (Updated: 1 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:-

காதலனுடன் செல்போனில் பேசிய போது ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

என்ஜினீயரிங் மாணவி

மதுரை மாவட்டம் கே.புதூர் அருகே மண்மலை மேடு பகுதியை சேர்ந்தவர் பீட்டர் பாபு. இவருடைய மகள் பிளசிங் ஜெபா (வயது 19). இவர், ஓசூர் பகுதியில் தனியார் கல்லூரி ஒன்றில் 3-ம் ஆண்டு பி.இ. பயோ மெடிக்கல் படித்து வந்தார்.

கல்லூரி விடுதியில் தங்கி இருந்த அந்த மாணவி, கடந்த ஒரு ஆண்டாக உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். செல்போனில் பேசிய போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

தற்கொலை

இதில் மனம் உடைந்த பிளசிங் ஜெபா விடுதி அறையில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தகவல் அறிந்த அட்கோ போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி தற்கொலைக்கு வேறு ஏதும் காரணம் இருக்கலாமா என்பது குறித்து விசாரணை நடத்தினர்.


Next Story