பொறியியல் பொது தொழிலாளர் சங்க மாநாடு


பொறியியல் பொது தொழிலாளர் சங்க மாநாடு
x

கோவை மாவட்ட பொறியியல் பொது தொழிலாளர் சங்க மாநாடு கோவை காட்டூரில் நடைபெற்றது.

கோயம்புத்தூர்

கோவை

கோவை மாவட்ட பொறியியல் பொது தொழிலாளர் சங்கத்தின் 24-வது மாநாடு கோவை காட்டூரில் உள்ள தியாகிகள் நிலையத் தில் நடைபெற்றது. ஏ.ஐ.டி.யு.சி. சங்க கொடியை கவுரவ தலைவர் சுப்பிரமணியன் ஏற்றினார்.

சங்க தலைவர் வக்கீல் ராதாகிருஷ் ணன் தலைமை தாங்கினார். அஞ்சலி தீர்மானத்தை சங்க செயலாளர் ராமச்சந்திரன் முன்மொழிந்தார். துணை பொது செயலாளர் தங்கவேல் வரவேற்றார்.

மாநாட்டை மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி தொடங்கி வைத்தார். இதில், முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், இந்திய கம்யூனிஸ்டு கோவை மாவட்ட பொதுச்செயலாளர் மூர்த்தி சுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

பொருளாளர் சுப்பிரமணியன் வரவு-செலவு அறிக்கை வாசித்தார். இதில் செல்வராஜ், கார்த்திகேயன், மல்லிகா புருஷோத்தமன், சாந்தி சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில், தொழிலாளர்கள் நலச்சட்டங்களை மத்திய அரசு திருத்தம் செய்யக்கூடாது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை குறைத்து விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும்.

இரும்பு, அலுமினியம், செம்பு, ரப்பர் உள்ளிட்டவற்றின் மூல பொருட்களின் விலையை குறைக்க மத்திய அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story