சேலத்தில் கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை
சேலத்தில் கல்லூரி விடுதியில் என்ஜினீயரிங் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சூரமங்கலம்:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் மலேசியாவில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் சீமேஸ் ரூபன் (வயது 19). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார். அவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் விடுதியில் நைலான் கயிற்றில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அறிந்த சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார் விரைந்து சென்று மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் தோல்வியால் மாணவர் சீமேஸ் ரூபன் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.