புதிய பாலம் கட்டுமான பணிகள் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்கள் குழு ஆய்வு


புதிய பாலம் கட்டுமான பணிகள் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்கள் குழு ஆய்வு
x

தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் புதிய பாலம் கட்டுமான பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறையின் என்ஜினீயர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்றுவரும் புதிய பாலம் கட்டுமான பணிகளின் தரம் குறித்து நெடுஞ்சாலைத்துறையின் என்ஜினீயர்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

உள்தணிக்கைக்குழு

தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்றுவரும் அனைத்து பணிகளின் தரம் மற்றும் கட்டுமானம் குறித்து ஆண்டுதோறும் உள்தணிக்கை செய்து அலுவலகக் கோப்புகள் மற்றும் பணித்தளங்கள் கண்காணிப்பு என்ஜினீயர்கள் தலைமையிலான உள்தணிக்கைக் குழுக்களால் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி நடப்பாண்டிற்கான உள்தணிக்கை ஆய்வுகள் மேற்கொள்வதற்காக நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனரின் உத்தரவின்படி கண்காணிப்புப் என்ஜினீயர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு மாநிலம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தஞ்சை மாவட்டத்தில் ஆய்வு

இதனைத் தொடர்ந்து தஞ்சை நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் வட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பாலப்பணிகளை விழுப்புரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளர் சத்தியபிரகாஷ் தலைமையிலான என்ஜினீயர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு தணிக்கை செய்து வருகிறது.அதன்படி இந்த குழுவினர் காலகம் - ஆவுடையார்கோவில் சாலையில் அம்புலியாற்றின் குறுக்கே திருச்சி நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் கோட்டத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் உயர்மட்டப்பாலப் பணிகளை தணிக்கைக்குழு தள ஆய்வு மேற்கொண்டு தணிக்கை செய்தது. இதில் பாலத்தின் நீளம், அகலம் மற்றும் உயரம்உள்ளிட்ட பாலத்தின் அளவீடுகளை அளந்தும் கட்டுமானத்தின் தரத்தினை உறுதிப்படுத்த தரக்கட்டுப்பாடு சோதனைகளை மேற்கொண்டும் ஆய்வு செய்யப்பட்டது.இந்தஆய்வின்போது திருச்சி நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் கோட்டப்பொறியாளர் முருகானந்தம், திருச்சி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் கேசவன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை என்ஜினீயர்கள் உடனிருந்தனர்.


Next Story