கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்த பொறியாளர்பிரிவு ஊழியர்கள்


கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்த பொறியாளர்பிரிவு ஊழியர்கள்
x

4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பொறியாளர்பிரிவு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர்.

வேலூர்

தமிழ்நாடு ஓவர்சீயர்ஸ் சங்கம் சார்பில் 4 அம்ச கோரிக்கைளை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக கருப்பு பேட்ஜ் அணிந்து பணிசெய்தல் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு ஓவர்சீயர்ஸ் சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர். வேலூர், காட்பாடி, கணியம்பாடி உள்பட 7 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொறியாளர் பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் ஓவர்சீயர்களின் பணிச்சுமையை உடனடியாக குறைக்க வேண்டும். ஓவர்சீயர்களின் காலிப்பணியிடங்களை பாதுகாப்பற்ற தற்காலிக தொழில்நுட்ப உதவியாளர்களை கொண்டு நியமனம் செய்வதை உடனடியாக கைவிட்டு நிரந்தரமாக நிரப்ப வேண்டும். அரசின் வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு உரிய புதிய பொறியாளர் பணியிடங்களை தோற்றுவித்து, அதில் தகுதியுடைய ஓவர்சீயர்களுக்கு பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து பணிபுரிந்தனர். மேலும் அவர்கள் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பணிநேரம் முடிந்த பின்னர் கோஷங்கள் எழுப்பினார்கள்.


Next Story