லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை
சோளிங்கர் பெரிய மலையில் உள்ள யோக நரசிம்மர் கோவிலிலும், சிறிய மலையில் உள்ள யோக ஆஞ்சநேயர் கோவிலிலும் ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு சிறப்பு பூஜை, அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு சோளிங்கர் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கலைக்குமார் குடும்பத்தின் சார்பில் 5,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இதில் கவிதா கலைக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் நாகராஜ், வழக்கறிஞர் உதயகுமார், மத்திய ஒன்றிய செயலாளர் பூர்ணசந்தர் சார்பில் யோக நரசிம்மர், யோக ஆஞ்சநேயர் மலைகோவிலுக்கு செல்லும் பக்தர்கள் 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிநடந்தது. இதில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன், நீதிபதி சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
மேல்வெங்கடாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு என்கிற ஜெகதீசன், கொடைக்கல் ஊராட்சி மன்ற தலைவர் ஹேமச்சந்திரன், தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.