ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை


ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை
x

ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பத்தூர் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம்செய்தனர்.

திருப்பத்தூர்

சிறப்பு பூஜை

வழிபாட்டுத்தலங்களில் நேற்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் நின்று ஏராளமான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கில புத்தாண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓட்டல்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தியும், சாலைகள், தெருக்களில் கேக்வெட்டியும் பொதுமக்கள் ஆங்கில புத்தாண்டை கொண்டா டினர். நள்ளிரவு 12 மணியளவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. புத்தாடைகள் அணிந்து ஆலயங்களுக்கு சென்றனர். திருப்பத்தூரில் உள்ள தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதேபோல் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருப்பத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் மற்றும் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில், சின்னகுளம் மாரியம்மன் கோவில், கஜேந்திர வரதராஜ ஆஞ்சநேயர் கோவில், பசலி குட்டை முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

புத்தாண்டை முன்னிட்டு சாலைகளில் இருசக்கர வாகனங்களில் வேகமாக செல்வது, பட்டாசுகள் வெடிப்பது உள்ளிட்டவைகளை தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் கூடுதல் போலீஸ்சூப்பிரண்டு, துணை போலீஸ்சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ் பெக்டர்கள், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். முக்கிய சாலைகளில் ரோந்து சென்றனர்.


Next Story